வாகனம் ேமாதி விவசாயி பலி

ராதாபுரம் அருகே வாகனம் மோதி விவசாயி பலியானார்.;

Update: 2022-08-20 19:14 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே உள்ள துரைக்குடியிருப்பு மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் முப்புடாதி (வயது 55). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். துரைக்குடியிருப்பு அருகே சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக ேமாட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முப்புடாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முப்புடாதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்