நத்தம் அருகே அய்யாபட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 70). விவசாயி. இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர், தனது வீட்டுக்கு அருகே உள்ள கோசாங்குளப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்றார். அப்போது அந்த பகுதியில் வந்த காளை மாடு ஒன்று திடீரென்று முத்துக்கருப்பனை முட்டி தள்ளியது. இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.