செல்லப்பிராணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்...!

கடலூர் அருகே செல்லப்பிராணி நாய்க்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி உள்ளனர்.;

Update:2022-05-26 15:53 IST


கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய்க்கு ஜாக்கி என்று பெயரிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். ஜாக்கி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்த, சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர்

விரும்பினர்.

அதன்படி தங்களது நெருங்கிய உறவினர்களை அழைத்து ஜாக்கியின் கழுத்தில் தங்க சங்கிலி மற்றும் மாலை அணிவித்து சீர் வரிசையுடன் வளைப்பு நடத்தினர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்