களைகட்டி வரும் கருவாடு வியாபாரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கருவாடு வியாபாரம் களைகட்டி வருகிறது.;

Update: 2022-06-28 18:11 GMT

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கருவாடு வியாபாரம் களைகட்டி வருகிறது.

மீன்பிடி தொழில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. அதுபோல் தொண்டி முதல் ராமேசுவரம், சாயல்குடி, நரிப்பையூர் வரையிலும் ஏராளமான மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியிலிருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பிடித்து வரும் பல வகை மீன்கள் துண்டு துண்டாக வெட்டி வெயிலில் நன்கு காய வைத்து கருவாடாக்கி வெளியூர்களுக்கு அனுப்பும் பணியானது தீவிரமாகவே நடைபெற்று வருகிறது. மீன்களை விட கருவாட்டுக்கு எப்போதும் கிராக்கி இருப்பதுடன் நல்ல விலை கிடைக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

கருவாடு

இதுகுறித்து சின்ன ஏர்வாடி பகுதியை சேர்ந்த வணக்கம் என்ற மீனவர் கூறும்போது, மீன்களை விட கருவாட்டுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும். கடந்த 2 மாதத்திற்கு மேலாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகு மட்டுமே மீன்பிடிக்க சென்று வந்தது. இதனால் கருவாடு வியாபாரம் குறைவாகவே தான் இருந்தது. தற்போது தடைக்காலம் முடிந்து விசைப்படகுகளும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வர தொடங்கி விட்டதால் ஏர்வாடி பகுதியில் விசைப்படகு மீனவர்கள் வலையில் பல வகை மீன்கள் கிடைத்து வருகின்றன.

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க செல்ல தொடங்கி உள்ளதால் ஓரளவு மீன்கள் கிடைத்து வருகி்றது. இவ்வாறு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய சாவலை, பெரிய திருக்கை, சின்ன திருக்கை, காரல், நெத்திலி உள்ளிட்ட பலவகை மீன்களை துண்டு துண்டாக வெட்டி வெயிலில் நன்கு உலர வைத்து அதில் உப்பு தடவி கருவாடாக பல ஊர்களுக்கு வியாபாரத்திற்கு அனுப்பி வருகின்றோம். பல ஊர்களில் உள்ள வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் இங்கு வந்து கருவாட்டை வாங்கி தான் செல்கின்றனர். அதிக மருத்துவ குணம் கொண்டது கருவாடு தான். நெத்திலி ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், சவாலை ரூ.120-க்கும், காரல் ரூ.120-க்கும், திருக்கை ரூ.250-க்கும் தற்போது விலை போகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்