உப்பனாற்று கரையை பலப்படுத்த வேண்டும்

சீர்காழி உப்பனாற்று கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-06-07 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி உப்பனாற்று கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

உப்பனாறு வடிவாய்க்கால்

சீர்காழியில் உப்பனாறு வடிவாய்க்கால் உள்ளது. இந்த ஆற்றின் இரு புறங்களிலும் தென்பாதி, சட்டநாதபுரம், பணமங்கலம், திட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

தற்போது இந்த ஆற்றின் கரையின் இரு புறங்களிலும் பல்வேறு இடங்களில் கரை வலுவிழந்து காணப்படுகிறது. எனவே வலுவிழந்த இந்த கரைகளை சீரமைத்து கரையை பலப்படுத்தி தரவேண்டும்.

கோரிக்கை மனு

மேலும் கரையின் இரு புறங்களிலும் விவசாய பணிகளுக்கு டிராக்டர்கள் கொண்டு செல்லும் வகையில் சாலையை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் விஜயகுமாரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்