மின் மோட்டார் கொட்டகை தீப்பிடித்து எரிந்து நாசம்

குன்னம் அருகே மின் மோட்டார் கொட்டகை தீப்பிடித்து எரிந்து நாசமானது.;

Update:2023-10-26 00:28 IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மின் மோட்டாருக்காக கீற்று கொட்டகையில் அறை அமைத்து இருந்தார். இந்த கீற்று கொட்டகையில் அவர் தனது நிலத்தில் விளைந்து வரும் பொருட்களை சேமித்து வைப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென எதிர்பாராதவிதமாக கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் மின் மோட்டார் அறையில் இருந்த சுமார் 10 மூட்டை தேங்காய், 10 உர மூட்டைகள், வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டைவ எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்