இருசக்கர வாகனத்தில் சென்ற டிரைவர் சாவு

இருசக்கர வாகனத்தில் சென்ற டிரைவர் சாவு

Update: 2022-09-12 15:50 GMT

சரவணம்பட்டி

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சுப்பிரமணி (வயது45). இவர் கோவில்பாளையம் அருகே செரயாம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டிபன் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் செரயாம்பாளையத்தில் இருந்து கோவில்பாளையம் வந்துள்ளார். பின்னர் மீண்டும் கம்பெனிக்கு செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்