பஸ்சில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி
பஸ்சில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்.;
வாணியம்பாடி
பஸ்சில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
ஆலங்காயத்தை அடுத்த கோமிட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45). தனியார் பஸ் டிரைவரான இவர் நேற்று காலை பணிமுடித்து விட்டு ஆலங்காயம் பகுதியில் இருந்து அவர் பணி புரியும் பஸ் மூலம் கோமிட்டியூரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் பஸ் கோமிட்டியூர் பஸ்நிலையத்தில் நின்ற போது ரமேஷ் இறங்க முயன்றுள்ளார். இதில் ரமேஷ் திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தான் பணி புரியும் பஸ்சில் இருந்தே நிலை தடுமாறி சாலையில் விழுந்து உயிரிழந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.