மினி லாரி மோதி நாய் குட்டி செத்தது

ரெட்டிச்சாவடி அருகே மினி லாரி மோதி நாய் குட்டி செத்தது.

Update: 2023-08-19 18:45 GMT

ரெட்டிச்சாவடி

ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிங்கிரிகுடியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 59). இவர் தனது வீட்டில் நாய் குட்டி ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அவரதுவீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த நாய்குட்டி மீது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று எதிர்பாராமல் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நாய்குட்டி சம்பவ இடத்திலேயே துடி துடித்து செத்தது. இதைப்பார்த்து அதிா்ச்சி அடைந்த செல்வராஜ் இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மினி லாரி டிரைவர் மணவாளன் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்