புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-02 16:44 GMT

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நேர்வில் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை எந்தவித விடுதலும் இன்றி தொழிலாளர் துறை இணையதளமான labour.tn.gov.in/ism என்ற இணையதளம் முகவரியில் உள்ளீட்டு முகவரியினை புதிதாக உருவாக்கி அதன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உரியவாறு பதிவேற்றம் செய்யாமல் அவர்களை பணி அமர்த்தியது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது 1979-ம் ஆண்டு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெறும் தொழிலாளர் சட்டம் மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சந்தேகம் இருந்தால்...

அவ்வாறு பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடமோ அல்லது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்