வாங்கிய கடனை தராதவருக்கு அடி-உதை

வாங்கிய கடனை தராதவர் தாக்கப்பட்டார்.;

Update: 2023-08-04 19:40 GMT

கலவை

வாங்கிய கடனை தராதவர் தாக்கப்பட்டார்.

கலவையை அடுத்த வேம்பிகிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் பெருமாள். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபாலிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ஊராட்சி பள்ளி அருகே பெருமாள் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்தகோபால் மகன் லோகேந்திரன், ராஜவேல் மகன் பாலு ஆகிய இருவரும் கடனை திருப்பிக்கேட்டு பெருமாளை தாக்கினர். பாதிக்கப்பட்ட பெருமாள் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இது குறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்