குறிச்சி ஊராட்சியில் எரிமேடை பணியை விரைந்து முடிக்கவேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
குறிச்சி ஊராட்சியில் எரிமேடை பணியை விரைந்து முடிக்கவேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை;
அம்மாபேட்டை
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி ராமாச்சிபாளையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அங்குள்ள மயானத்தில் எரிமேடை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 8½ லட்சம் ரூபாய் மதிப்பில் எரிமேடை கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதமாக அங்கு எந்த பணியும் நடைபெறவில்லை. அந்த இடத்தில் புற்கள் முளைத்து காணப்படுகிறது.
தற்போது இறந்தவர்களின் உடல்களை எரிக்க வழி இல்லாமல் புதைத்து வருகின்றனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் அங்கு புதைக்கப்பட்டால் மயானத்தில் இடம் இருக்காது. எனவே எரிமேடை பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.