மாடுகளை பிடித்து பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும்
மன்னார்குடி நகரில் 1-ந்தேதி முதல் சாலைகளில சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார்குடி:
மன்னார்குடி நகரில் 1-ந்தேதி முதல் சாலைகளில சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
மன்னார்குடி நகராட்சி பகுதியில் தெருக்கள், சாலைகள், கடைத்தெருவில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து மன்னார்குடி நகரில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் உரிமையாளர்கள் மாடுகளை சாலையில் சுற்றித்திரிய விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது.
பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு
வருகிற 31-ந் தேதிக்குள்(ஞாயிற்றுக்கிழமை) மாடுகளை சாலைகளில் திரிய விடுவதை நிறுத்தி கொள்ளவேண்டும். இதை மீறி மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிய விட்டால் வருகிற 1-ந்தேதி முதல் சாலை மற்றும் ெதருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.