குடிசை வீடு தீயில் கருகியது

குடிசை வீடு தீயில் கருகியது

Update: 2022-11-11 18:56 GMT

திருப்பத்தூர் அருகே ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சி, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அறிவு (வயது 50). குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் விவசாய நிலத்திற்கு சென்றார். மதியம் 12 மணியளவில் வீட்டில் இருந்து புகை வர ஆரம்பித்தது. உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலானது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் சுகுகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சாந்தா சண்முகம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி அரிசி. பருப்பு, ரொக்க பணம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்