போலீசாரை ஆபாசமாக திட்டிய ஜோடி; ஜாமீன் கோரி மனு - காவல்துறை பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
போலீசாரை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் கைதான சந்திரமோகனின் ஜாமின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து சந்திரமோகன் ஜாமின் கோரி சென்னை மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.