திருமண மண்டபத்தில் படுத்து இருந்த சமையல் தொழிலாளி திடீர் சாவு

திருமண மண்டபத்தில் படுத்து இருந்த சமையல் தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.

Update: 2023-05-25 19:13 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மதுராந்தக நல்லூர் அழகாத்த குலத்தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் என்கிற சதீஸ்(வயது 48). சமையல் தொழிலாளியான இவர், கரூர் மாவட்டம் புகழூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமையல் வேலை செய்வதற்காக வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு சமையல் வேலை செய்துவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சக தொழிலாளர்கள் சக்திவேலை எழுப்ப முயன்றபோது அவர் இறந்துகிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலாயுதம்பாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்