காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-27 19:04 GMT

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜனதா அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மணிப்பூரில் நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அதனை தடுக்க இயலாத மத்திய அரசை கண்டித்தும், இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பதவி விலக கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்