கவர்னரை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கவர்னரை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-01-10 19:49 GMT

ஜெயங்கொண்டம்:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர். ராஜாபெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமநாதன், நகர செயலாளர் இறைக்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 15 பேரை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்