உலக மக்கள் தொகை தின கொண்டாட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2023-07-29 08:38 GMT

செங்கல்பட்டு, 

 நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் குறித்து குடும்ப நல உறுதி மொழியை அனைத்து துறை அலுவலர்களும், டாக்டர்களும் மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.

அதை தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினம் குறித்து விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் உலக மக்கள் தொகை தினம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய "மீண்டும் மஞ்சப்பை" என்ற துணிப்பைகளையும் கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினம் குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி செங்கல்பட்டு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரி வரை சென்றது.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு இணை இயக்குநர் (நலப்பணிகள்) தீர்த்தமலை, காஞ்சீபுரம் துணை இயக்குநர் (குடும்ப நலம்) மலர்விழி, செங்கல்பட்டு துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பரணிதரன், செங்கல்பட்டு துணை இயக்குநர் (காசநோய்) காளீஸ்வரி, காஞ்சீபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி, காஞ்சீபுரம் மக்கள் கல்வி தொடர்பு அலுவலர் நாகராஜன், காஞ்சீபுரம் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் எம்.தாரா, செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் குடும்ப நலச்செயலக ஊழியர்கள், மருத்துவகல்லூரி நர்சுகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்