உயர்தர அறிவுதிறன் வகுப்பறை திறப்புவிழா

உயர்தர அறிவுதிறன் வகுப்பறை திறப்புவிழா நடைபெற்றது;

Update: 2023-01-03 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே உஞ்சனை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் உயர்தர அறிவுதிறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்கப்பட்டது. இந்த வகுப்பறையை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பொன்மனச்செம்மல் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்