மெட்ரோ ரெயில் பணிகளை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் இறையன்பு..!

மெட்ரோ ரெயில் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆய்வு செய்தார்.;

Update: 2023-04-04 06:55 GMT

சென்னை,

சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் 128 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அந்தவகையில் மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4-வது வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை, மாதவரத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் தலைமை செயலரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.



Full View


Tags:    

மேலும் செய்திகள்