லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-03-30 17:37 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் தேர்திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் பத்து நாள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இதேபோல் இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பக்தோசி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜை செய்யப்பட்டு புனித நீர் ஊற்றி பந்தக்கால் நடப்பட்டது. தேருக்கும் சிறப்பு பூஜை செய்யபப்ட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயா மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்