மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு க்கப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 60). இவர் தனது கணவர் முனியாண்டியுடன் சடையனேரி கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜம்மாள் தனது வீட்டில் பின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ராஜம்மாளின் முகத்தை கைலியால் மூடி கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்தார். ராஜம்மாள் தாலி செயினை தனது கைகளால் இறுக்கிப்பிடித்ததில் பாதி செயின் மர்ம நபர் கையில் சிக்கியது. கையில் சிக்கிய 1½ பவுன் சங்கிலியுடன் மர்ம நபர் தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.