பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போனால் பரபரப்பு
மலர் தூவியபோது மலர்களுடன் செல்போன் ஒன்று பறந்து வந்து பிரதமர் மோடி வந்த ஜீப் மீது விழுந்தது.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நடந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக பொதுக்கூட்ட மேடைக்கு திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஊர்வலமாக வந்தனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், மலர் தூவி பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது மலர் தூவியபோது மலர்களுடன் செல்போன் ஒன்று பறந்து வந்து பிரதமர் மோடி வந்த ஜீப் மீது விழுந்தது. இதை மத்திய மந்திரி எல்.முருகன், தலைவர் அண்ணாமலை பார்த்து பதறினர்.
இதை கவனித்த பிரதமர் மோடி தனது பாதுகாவலரிடம் சைகை காட்டி செல்போனை எடுக்க கூறினார். அவர் ஜீப் மீது ஏறி செல்போனை எடுத்து அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் மலர் தூவும்போது செல்போன் தவறி விழுந்தது தெரியவந்தது. அதன்பிறகு உரியவரிடம் செல்போனை ஒப்படைத்தனர்.