வேலூர் மேயர் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வாங்கும் அறிவிப்பை வேலூர் மேயர் தலைமையில் இனிப்பு வழங்கி கவுன்சிலர்கள் கொண்டாடினர்.

Update: 2023-07-14 18:09 GMT

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வாங்கும் அறிவிப்பை வேலூர் மேயர் தலைமையில் இனிப்பு வழங்கி கவுன்சிலர்கள் கொண்டாடினர்.

தமிழகத்தில் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களைக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருவதைபோல, மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து வேலூர் மாநகராட்சியில் மேயர் சுஜாதா தலைமையில், 2 வது மண்டல குழு தலைவர் நரேந்திரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் பட்டாசு வெடித்தும் மத்தாப்பு கொளுத்தியும் மகிச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்