நிலம் ஆக்கிரமிப்பு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு

நிலம் ஆக்கிரமிப்பு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-06-02 20:54 GMT

திருச்சி:

திருச்சி மாவட்டம் அல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாண்டவராயன்(வயது 45). இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நான் கடந்த 20 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து வந்தேன். அங்கு சம்பாதித்த பணத்தில் கடந்த 2014, 2015, 2016-ம் ஆண்டுகளில் 4¼ ஏக்கர் நிலம் (5 வயல்கள்) வாங்கினேன். 3 மாதத்துக்கு ஒருமுறை மலேசியாவில் இருந்து வந்து வயலில் விவசாயம் செய்து வந்தேன். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 வருடமாக இந்தியாவுக்கு வரமுடியவில்லை.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து இந்தியா வந்து பார்த்தபோது, அந்த வயலை எனது சகோதரரும், அல்லூர் ஊராட்சி மன்ற தலைவருமாகிய தி.மு.க.வை சேர்ந்த விஜயேந்திரன் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். நான் அவருக்கு எனது நிலத்தை அடமானமாகமோ, குத்தகையோ வழங்கவில்லை. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தார். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயேந்திரன் மீது மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.நிலம் ஆக்கிரமிப்பு புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்