நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
பனவடலிசத்திரம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
பனவடலிசத்திரம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 44). இவர் தனது காரில் சாத்தான்குளத்தில் இருந்து தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தார். சங்கரன்கோவில் அருகே சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே நடுரோட்டில் காரை நிறுத்தி பார்த்தார். அப்போது திடீரென மளமளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரில் பயணம் செய்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.