தீ விபத்தில் கார் எரிந்தது

ஊட்டியில் நள்ளிரவில் தீ விபத்தில் கார் எரிந்தது.

Update: 2022-12-25 18:45 GMT

ஊட்டி,

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சுஜில். மீன் வியாபாரி. இவர் கேரளாவில் இருந்து மொத்தமாக மீன் வாங்கி ஊட்டியில் உள்ள மீன் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு சுஜில் சென்றார். அவர் தனது காரை லோயர் பஜார் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென்று கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் தீ மள மள வென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மேலும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தீ விபத்தில் சுஜில் கார் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்