கிருதுமால் நதியில் 5 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க கால்வாயை விரிவுப்படுத்த வேண்டும்

கிருதுமால் நதியில் 5 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க கால்வாயை விரிவுப்படுத்த வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Update: 2023-02-12 19:35 GMT

காரியாபட்டி, 

கிருதுமால் நதியில் 5 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க கால்வாயை விரிவுப்படுத்த வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் விவசாய சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். வைகை ஆற்றில் விரகனூர் மதகு அணையில் இருந்து மேலவெள்ளூர் வரை கிருதுமால் நதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் 13 கிலோ மீட்டர் தூர வாய்க்காலை 5 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் கொண்டு வர விரிவுப்படுத்த வேண்டும்.

கருவேல மரங்கள்

காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் காட்டுப்பன்றிகளால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமைக்கருவேல் மரங்களை முழுமையாக அழிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கட்டனூர், இருஞ்சிறை, டி.கடம்பன்குளம் ஆகிய கிராமங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்ததற்கு கலெக்டருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுணன், மாநில செயலாளர் முருகன், மாநில துணை தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான மச்சேஸ்வரன், விருதுநகர் மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட செயலாளர் அய்யனார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்