மரக்கிளையில் மோதி பள்ளத்தில் இறங்கிய பஸ்; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மரக்கிளையில் மோதி பஸ் பள்ளத்தில் இறங்கியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Update: 2023-05-04 20:11 GMT

லால்குடி:

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து லால்குடி, கொப்பாவளி, சாத்தமங்கலம் வழியாக ஆனந்திமேடு கிராமத்திற்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் கர்ப்பிணி உள்பட 40 பேர் பயணம் செய்தனர். கொப்பாவளியில் இருந்து ஆனந்திமேட்டுக்கு சென்றபோது, சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரக்கிளையில் அந்த பஸ் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. இதை பார்த்த கிராம மக்கள், பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறங்க செய்தனர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சாலையின் இருபுறங்களிலும் உள்ள பள்ளங்களை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்