உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்

திருமால்பூரில் உடை்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-07-17 18:21 GMT

உடைந்த பாலம்

நெமிலியை அடுத்த திருமால்பூர் கிராமத்தின் வழியே பனப்பாக்கம்-பள்ளுர் சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே விருதசீர நதியின் மீது கட்டப்பட்ட தரைபாலம் ஒன்று கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த உடைந்த பாலத்தின் வழியே தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, வேலைக்கு சென்றுவருகின்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக உடைந்த பாலத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

சீரமைக்க கோரிக்கை

உடைந்த பாலத்தை சீரமைக்ககோரி பலமுறை நெடுஞ்சாலை துறைக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று கூறப்படுகிறது. மேலும் இப்போது சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள் அந்த பகுதியில் நடைபெற்றுவருவதால் கனரக வாகனங்கள் உடைந்த பாலத்தின் மீது செல்வதால் மேலும் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்