ஓசூர்
தர்மபுரி மாவட்டம அரூர் கூச்சனூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோகுல் (வயது27). இவர் ஓசூரில் அரசனட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் புதிதாக வாங்கிய லேசர் மூலம் கம்பியை துண்டிக்கும் எந்திரத்தில் வேலை செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரத்தில் கோகுல் தலை சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த கோகுலுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார்.