சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு;

Update: 2023-03-12 18:45 GMT

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிறுமி கடத்தல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (வயது24). இவர் மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இந்த சிறுமி 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சிறுமி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஜான், சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வலைவீச்சு

புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் போலீசார் சிறுமியை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து ஜானை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்