ராஜபாளையம்,
ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கலம்- ரஞ்சனி தம்பதியினரின் மகன்கள் அரியன் (வயது 18), ஆதி மணி (16), புகழேந்தி (15). அரியன், ஆதி மணி ஆகியோர் நண்பர்களுடன் சோமையாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது அவரது அண்ணன் அரியன் மற்றும் நண்பர்கள் குளித்து முடித்துவிட்டு கிணற்றை விட்டு வெளியே வந்ததாக கூறப்படு்கிறது. அப்போது ஆதி மணி தனியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நீரில் மூழ்கினார். உடனே அவர்கள் ஆதிமணியை கிணற்றில் இறங்கி தேடினர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் தேடலுக்கு பிறகு ஆதிமணியின் உடலை மீட்டனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.