விஷப் பூச்சி கடித்து சிறுவன் சாவு

நாசரேத்தில் விஷப் பூச்சி கடித்து சிறுவன் பரிதாபமாக இறந்து போனான்.;

Update: 2022-08-22 15:08 GMT

நாசரேத்:

நாசரேத் ஞானராஜ் நகரைச்சேர்ந்த கள்ளாண்டகுமார் மகன் ஹரிகரசுதன் (வயது 5). ஹரிகரசுதன் தூங்கிக் கொண்டிருந்த போது நேற்று அதிகாலையில் விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய சிறுவனை, நாசரேத் தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்