மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.;

Update: 2023-10-22 09:08 GMT

மதுரை,

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஆகியவற்றின் சார்பாக புத்தக திருவிழா நடக்கிறது. இதனை கடந்த 12-ந்தேதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

இங்கு 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், சிறார் சினிமா போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்ற சிந்தனை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில் இந்த புத்தக திருவிழாவானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

  

Tags:    

மேலும் செய்திகள்