கள்ளிக்குடி அருகே தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு- 4 பேர் மீது வழக்கு

கள்ளிக்குடி அருகே தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2023-06-20 20:27 GMT

திருமங்கலம், 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி முத்துமாரி. இவர் சம்பவத்தன்று இரவில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த உறவினர்களும், அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் முத்துமாரியின் உடலை எரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சென்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயா, கள்ளிக்குடி போலீசில் புகார் கொடுத்தார்.

தற்கொலை செய்த பெண்ணின் உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் எரித்ததாக முத்துமாரியின் கணவர் வேல்முருகன் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த பாண்டி, பன்னீர்செல்வம், அருண்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் முத்துமாரியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்