கண்ணாற்றில் மிதந்து வந்த ஆண் பிணம்

கண்ணாற்றில் மிதந்து வந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-07-08 18:27 GMT

குளித்தலை எல்.ஆர்.எஸ். பாலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள கண்ணாற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை போலீசார் மற்றும் மணத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் அழகர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தண்ணீரில் மிதந்து வந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அழகர் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபரின் முகத்தில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்