சுற்றுலா பயணிகள் இன்றி படகு இல்லம் வெறிச்சோடியது
ஏலகிரி மலையில் மொகரம் பண்டிகை மற்றும் வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் இன்றி படகு இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது.;
ஏலகிரி மலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாத் தலமான இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் இங்குள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி மலை ஏற்றம், முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கலை பார்த்து செல்வார்கள்.
வெறிச்சோடியது
அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மொகரம் பண்டிகை மற்றும் வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி படகு சவாரி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. சாலையோர வியாபாரிகளும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் பாதிக்கப்பட்டனர்.