மதுக்கடையை மூட வேண்டும்

திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2023-07-10 19:30 GMT

நெடுஞ்சாலை அருகில் மதுக்கடை

திருவாரூர் விளமல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் அரசு மதுபானக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலை வழியாக நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு தினந்தோறும் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

மதுக்கடை இயங்கும் வழியாகத்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கோர்ட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் அங்கு மதுக்கடை இயங்குவது இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

கலெக்டரிடம் மனு

ஐகோர்ட்டு தீர்ப்பின்படி நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் எந்த மதுக்கடையும் அமைக்கக்கூடாது. இதை மீறி விளமல் பகுதியில் மதுக்கடை அமைந்துள்ளது. இதை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் சாருஸ்ரீயிடம் மனு அளித்தனர்.

முன்னதாக அந்த அமைப் பினர் மதுக்கடைக்கு எதிராக பதாகை ஏந்தியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்