ஆவடியில் 3 நாள் உணவு திருவிழா - 150 நாடுகளில் உணவுகள் இடம்பெற்றன - அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடியில் 3 நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-06-10 14:12 GMT


திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவடி எச்.வி.எப். மைதானத்தில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் உணவு திருவிழாவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து.

இங்கு 100 அரங்குகளில் 150 நாடுகளில் இருக்கக்கூடிய உணவு கலாச்சாரங்கள், உணவு பழக்க வழக்கங்கள், அவர்களுடைய உணவு தயாரிக்கும் முறைகள், இவையெல்லாம் ஒன்றாய் இணைந்து பல்வேறு அரங்குகளை இணைத்து அமைக்கப்பட்டு உள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் பட்டிமன்ற நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அடுப்பில்லாத சமையல், குழந்தைகளுக்கான சமையல், பாரம்பரிய சமையல், சமையல் அலங்காரம் உள்ளிட்ட சமையல் போட்டிகள், உணவு சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், திரை நட்சத்திரங்கள் மற்றும் பின்னணி இசை பாடகர்கள் பங்கேற்கும் சமையலும் சங்கீதமும் என்ற நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

மேலும் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு அறுசுவை அரசன், அறுசுவை அரசி உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.

விழாவின் முதல் நாளான இன்று உலக ஐஸ்கிரீம் தினத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பாக ஆவின் பொருட்களை வைத்து உலகின் உயரமான ஐஸ்கிரீம் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ், திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்