தாராபுரம் தாலுகாவில் குரூப்-4 தேர்வை 5 ஆயிரத்து 112 பேர் எழுதினர். 1045 பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-4 தேர்வு
தாராபுரம் தாலுகாவில் டி.என்.பி.சி. குரூப்-4 தேர்வு எழுத விண்ணப்பித்த 6 ஆயிரத்து 157 பேர்களில் 1045 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 5 ஆயிரத்து 112 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக டி.என்.பி.சி. நிர்வாகம் எழுத்து தேர்வு மூலம் பணியாட்களை நியமிக்க அரசாணை வெளியிட்டது. தாராபுரம் தாலுகா பகுதியில் தேர்வு எழுத 6 ஆயிரத்து 157 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்தது. தாராபுரம் தாலுகாவில் தாராபுரம், மூலனூர், குண்டடம், அலங்கியம், பொன்னாபுரம், கன்னிவாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தேர்வு எழுத வரவில்லை
அதன்படி விண்ணப்பித்த 6 ஆயிரத்து 157 பேரில் 1045 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 5 ஆயிரத்து 112 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். கண்காணிப்பு அலுவலராக தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமையில் பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் தேர்வு மைய மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.