ராஜராஜசோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

ராஜராஜசோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

Update: 2022-11-10 19:52 GMT

ராஜராஜசோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் பட்டுக்கோட்டையில், அவைத்தலைவர் சுப.சேகர் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. வரவேற்றார். உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர செயலாளர்கள் செந்தில்குமார், ராமகுணசேகரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆர்.பி.ரமேஷ், சத்தியமூர்த்தி, மைக்கேலம்மாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

கூட்டத்தில், தி.மு.க.வின் 15-வது உட்கட்சி தேர்தலில் தி.மு.க. தலைவராக 2- வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் வாழ்த்து தெரிவிப்பது. 15-வது தி.மு.க. பொதுத்தேர்தலில் தெற்கு மாவட்ட செயலாளராக அண்ணாதுரையை தேர்ந்தெடுத்த தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவிப்பது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான வருகிற 27-ந் தேதி நகர, ஒன்றிய, பேரூர், கிளை தோறும் தி.மு.க. கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 என பெரும் வெற்றியை தி.மு.க. தலைவரிடம் அளித்திட முயற்சியாக வாக்குச்சாவடி முகவர், வாக்குச்சாவடி குழு புதிய வாக்காளர் சேர்க்கை என தி.மு.க. அறிவிக்கும் பணிகளையும் சிறப்பாக செயல்படுத்துவது.

வாக்குச்சாவடி முகவர்கள்

தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 12, 13 மற்றும் 26, 27-ந் தேதிகளில் நடைபெறும் அந்தந்த வாக்குச்சாவடி முகாம்களில் நடைபெறும் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல்களில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்ற கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் பொருளாளர் அஸ்லாம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்