"அடாத மழையிலும் விடாது பணி" அரசு ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-11-11 17:05 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 29 முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.

சென்னை, சென்னையில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதில்,

மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே!

சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே!

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான் வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது! என பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்