தாளவாடி -கடம்பூர் மலைப்பகுதிகளில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

Update: 2022-07-06 15:28 GMT

ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளான திங்களூர் மற்றும் கடம்பூர் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் தரமான சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் பயறுவகைகளான உளுந்து, வம்பன் -10, பாசிப்பயிறு கோ-8, தட்டைப்பயிறு கோ-7 ஆகிய ரகங்களின் ஆதார நிலை விதைகளை மானிய விலையில் வழங்கி விதைப்பண்ணை அமைத்துள்ளனர்.

இந்த விதைப்பண்ணைகளை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவருடன், சத்தியமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாரியப்பன், விதைச்சான்று அலுவலர் அருணாஜோதி, பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து, உதவி விதை அலுவலர்கள் மதன், ஸ்டாலின், வீர்தினேஷ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்