முத்துமாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா

கலவை முத்துமாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.;

Update: 2023-01-22 16:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை முத்துமாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் பால்குட ஊர்வலமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பெண்கள் நேர்த்திக்கடனாக பூ கரகம், தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவையும், மாலையில் இளைஞர்கள் காட்டேரி முனீஸ்வரன் போன்ற வேடமணிந்து கலவை நகர வீதியில் ஊர்வலமாக வந்தனர். இரவில் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் செண்டை மேளத்துடன் கலவை நகர வீதியில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்