மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-22 12:26 GMT

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஜனநாயக ஜனதா தளம் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ராபர்ட் கிறிஸ்டி தலைமையில் வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் மனு அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ராபர்ட் கிரிஸ்டி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக மனு அளிக்க வந்த பெண்கள் கூறும் போது, நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்து, போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. மனு அளிக்க கூட காவல்துறை அனுமதி மறுத்தது வேதனை அளிக்கிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்