தென்காசி மாவட்ட மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை

மாநில குங்பூ வூஷூ போட்டியில் தென்காசி மாவட்ட மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

Update: 2023-10-10 19:00 GMT

வாசுதேவநல்லூர்:

ஓசூரில் மாநில அளவில் குங்பூ வூஷூ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். 47 தங்கப்பதக்கங்கள், 13 வெள்ளி பதக்கங்கள், 9 வெண்கல பதக்கங்கள் வெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். மாணவர்களுக்கு அகில இந்திய குங்பூ வூஷூ செயலாளர் ஹர்தீப் சிங் பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு குங்பூ வூஷூ செயலாளர் சிவக்குமார், தலைவர் சசிதேவ், தென்காசி மாவட்ட குங்பூ வூஷூ அசோசியேசன் செயலாளர் கோபாலகிருஷ்ணன், தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் பசுபதி, பொருளாளர் பிரவீன் உள்பட பலர் பாராட்டினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்