களியக்காவிளை அருகே டெம்போ டிரைவரை தாக்கி பணம் பறிப்பு; வாலிபர் கைது
களியக்காவிளை அருகே டெம்போ டிரைவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே டெம்போ டிரைவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் குமாரதாஸ் (வயது 47). இவர் தக்கலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெம்போ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று களியக்காவிளை பஸ்நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்த போது குளப்புறம் பகுதியை சேர்ந்த லிபின் (24), களியக்காவிளையை சேர்ந்த அக்பர் (26) ஆகியோர் சேர்ந்து குமாரதாசிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லிபின் மற்றும் அக்பர் அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துள்ளனர்.
இதுகுறித்து குமாரதாஸ் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிபினை கைது செய்தனர். அக்பரை தேடி வருகின்றனர்.