மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதல்; பூசாரி சாவு

தென்தாரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதியதில் கோவில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-30 18:45 GMT

தென்தாமரைகுளம்:

தென்தாரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதியதில் கோவில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.

கோவில் பூசாரி

தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 70). இவர் அந்த பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு தங்கம்(65) என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று பன்னீர்செல்வம் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

டெம்போ மோதியது

அவர் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகில் வந்தபோது, அவருக்கு பின்னால் கீழமணக்குடி பகுதியில் உள்ள ஒரு தும்பு மில்லில் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மதுராபிரிஜியா என்பவர் ஓட்டிய தண்ணீர் ஏற்றி வந்த டெம்போ மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பன்னீர்செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் அகிலா தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்